அந்த ஒரு வார்த்தை..... பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை தலைதெறிக்க ஓட விட்ட இளம்பெண்!

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரை, இளம்பெண் ஒருவர் சாதுர்யமாக பேசி தலைதெறிக்க ஓட விட்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த 29 வயது விதவை இளம்பெண் தன்னுடைய 6 வயது மகளுடன் இரவு நேரத்தில் தர்கா பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறைத்து, அந்த இளம்பெண் லிப்ட் கேட்டுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர், கத்தி முனையில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட அவர், தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்.

இதனையடுத்து இளம்பெண் கொடுத்த அங்கு அடையாளங்களை வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் கிஷோர் விலாஸ் அவாத் (22) என்பதும், தந்தையை கொலை வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடினமான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட அந்த பெண்ணை தற்போது பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்