எனது அப்பா என்பதற்காக.... கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் பதிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

எனது தந்தையின் அரசியல் பயணம் குறித்து பெருமை கொள்கிறேன் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது. உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச்லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன் என ஸ்ருதிஹாசன் பதிவிட்டிருந்தார்

இந்த பதிவுக்கு, உங்களது தந்தை என்பதால் வாக்கினை அவருக்கு செலுத்துவது சரியா? சரியான வேட்பாளரைதான் தெரிவு செய்யவேண்டும் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்த ஸ்ருதி, அவர் எனது அப்பா என்பதால் நான் அவ்வாறு சொல்லவில்லை, அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என எனது வாக்கு அவருக்கு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers