விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து கண்கலங்கிய தொண்டர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து தொண்டர்கள் கண்கலங்கியுள்ளனர்.

விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் பிரச்சாரத்திற்கு செய்யவில்லை. இதனால் கட்சி தொண்டர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். 37 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில், 6 கட் இருக்கிறது.

ஆனால், அவரால் ஒழுங்காக பேசக்கூட முடியவில்லை. தேர்தல் நேரத்தில் கம்பீரமாக இருக்க வேண்டிய நமது தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே என தொண்டர்கள் இந்த வீடியோவை பார்த்து கண்கலங்கியுள்ளனர்.

விஜயகாந்த் உடல்நல பிரச்சினைக்காக இரண்டு முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers