கனடாவில் வேலை வாய்ப்பு: 20 பேரிடம் இருந்து கோடிகள் ஏமாற்றிய கும்பல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கும்பல் ஒன்று கனடா நாட்டில் வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

குறித்த விவகாரத்தில் பொலிசார் நடத்திய துரித நடவடிக்கையின்பேரில் இந்தியாவின் பல மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பல பேரிடம் இருந்தும் இந்த கும்பல் முன்பணமாக 10,000 முதல் 8 லட்சம் வரை கைப்பற்றியுள்ளனர்.

இதில் 20 பேரிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் இந்த கும்பல் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் ஓராண்டுக்கு முன்னர் தொடங்கிய ஒரு நிறுவனத்தின் பேரில் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.

நாளேடுகளில் விளம்பரம், வாட்ஸ்அப் குழுவில் அறியப்படுத்தியும் ஆட்களை கவர்ந்துள்ளனர்.

கனடாவில் சாரதி, கணக்காளர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகளூக்காக விசா வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.

மேலும், விண்ணப்பித்த அனைவரிடம் இருந்தும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியுள்ளனர்.

முதல் 6 மாத காலம் சிங்கப்பூரிலும் பின்னர் அங்கிருந்து கனடாவுக்கும் அனுப்புவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் பணம் அளித்து 7 மாதங்கள் கடந்தும் எந்த தகவலும் இல்லை என அறிந்த சிலர், குறித்த அலுவலகத்தை நாடியுள்ளனர்.

ஆனால் அந்த அலுவலகம் கடந்த சில நாட்களாக மூடிக்கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சிலர் அந்த நிறுவனத்தினர் தெரிவித்த இணையதளத்தை பரிசோதித்துள்ளனர்.

அப்போதே அந்த நிறுவனம் போலி என தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிசாரை அணுகியுள்ளனர். இதில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கேரள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் ரதீஷ் என்பவர்களையும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers