இந்தியா என்றால் மோடி அல்ல.. மோடி என்பது இந்தியாவும் அல்ல! கடுமையாக விளாசிய மெகபூபா முப்தி

Report Print Kabilan in இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விளாசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீரை முப்தி மற்றும் அப்துல்லா குடும்பங்கள் 3 தலைமுறைகளாக ஆண்டுவிட்டதாகவும், நாட்டை துண்டாட நினைக்கும் அவர்களை அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி பேசினார். அப்போது அவர் மக்களை மோடி தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு மட்டும் நாட்டைப் பற்றிய சிந்தனை, தேசப்பற்று இல்லை. தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நாடு குறித்த தேசப்பற்றும், கடமையும் இருக்கிறது. இந்தியா என்பது மோடியும் அல்ல, மோடி என்பது இந்தியாவும் அல்ல.

மக்களிடம் இருந்து இரக்கத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளை அவதூறாக மோடி பேசுகிறார். இவ்வாறு எதிர்க்கட்சிகளை அவதூறு பேசும் மோடி சார்ந்திருக்கும் கட்சி ஏன் தேர்தலுக்கு முன் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி கூட்டணி குறித்து பேச வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்