கோபம் வருமா வராதா? ரஜினியை துவைத்து எடுத்த சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் நதிநீர் இணைப்பு தொடர்பில் பாஜக தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதை ரஜினி ஆதரித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், நதிநீர் இணைப்பு என்பது முட்டாள்கள் கூடி முடிவெடுப்பது போன்ற செயல்.

ஆறுகளை அதன் போக்கில் ஓடவிட்டு, தேவையென்றால் அதன் பக்கத்தில் சேமித்துக்கொள்லாமே தவிர, அதன் போக்கை திருப்பக்கூடாது.

உடலில் ரத்த நாளங்கள் போல, பூமியின் ரத்த நாளங்கள் ஆறுகள். அதனை இங்கு திருப்புவேன் அங்கு திருப்புவேன் என்பதா?

நடிகர் ரஜினி நதிகளை இணையுங்கள் என்கிறார். காவிரியோட எந்த நதியை இணைப்பார்கள். அவரை சொல்ல சொல்லுங்கள்.

காவிரி இணைய மறுத்ததா? தர மறுக்கிறான். 150 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பவனை இணையலாம் என்றால் துண்டாக போய்விடமாட்டானா?

எங்களை அடித்து விரட்டிக்கொண்டிருப்பவனிடம் நதிகளை இணைக்கலாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வானா?

மக்களை ஏமாற்றும் வேலை. அப்போ கோபம் வருமா வராதா. எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது.

ஒரு கோடி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கு கொடுத்தீர்கள். ஒரு கோடியை வைத்து ஒரு கிலோ மீட்டர் நதியை இணைத்துவிடலாமா.

இதனை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் இப்படி பேசிக்கொண்டு அலையலாமா என காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்