அவர் காக்கி நிற உள்ளாடை தான் அணிவார் என எனக்கு தெரியும்... பிரபல நடிகை குறித்து சர்ச்சையாக பேசிய நபர்

Report Print Raju Raju in இந்தியா

நடிகை ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிவார் என அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஆசம்கான் கூறியதாக தகவல் வெளியான நிலையில் தான் அவ்வாறு கூறவில்லை என பல்டியடித்துள்ளார்.

ஜெயப்பிரதா தமிழில் மன்மதலீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம்கான் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஆசம்கான், ஜெயப்பிரதாவின் உண்மை முகத்தை தெரிந்துகொள்வதற்கு மக்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது.

ஆனால் அவர் காக்கி உள்ளாடை அணிபவர் என்பதை 17 நாட்களில் நான் தெரிந்து கொண்டேன் என கூறினார்.

ஆசம்கானின் பேச்சு கடும் சர்ச்சையான நிலையில், ஜெயப்பிரதாவின் பெயரைக் குறிப்பிட்டு தாம் அவ்வாறு கூறவில்லை என்றும், ஆர்எஸ்எஸ்காரர்கள் அணியும் காக்கி டிரவுசரையே தாம் குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயப்பிரதா பெயரைக் குறிப்பிட்டு ஆட்சேபணைக்குரிய வகையில் தாம் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் ஆசம்கான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...