துலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்து விபத்து: சசி தரூர் படுகாயம்!

Report Print Arbin Arbin in இந்தியா

துலாபாரத்தின் போது தராசு உடைந்ததில் திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் படுகாயம் அடைந்துள்ளார்.

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் சசி தரூர்.

இவர், தம்பானூர் பகுதியில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் இன்று எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது துலாபாரத் தராசின் ஒரு பக்கத்தில் வாழைப்பழங்களும் மறுபக்கம் அவரும் உட்கார்ந்தனர். இந்த நிலையில் அவர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்தது. இதில் சசிதரூரின் தலையின் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அவரது காலிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ள.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers