பிரச்சாரத்திற்கு கம்பீரமாக கிளம்பிய விஜயகாந்த்..முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா

திரைப்பட நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு கிளம்பிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ஆம் திகதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன.நாளை மாலை 5 மணியுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்கிற தேர்தல் உத்தரவு உள்ளதால், இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்,

இருந்தபோதிலும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.ஆனால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த் ஒய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் தொடர்ந்து ஒய்வில் இருந்து வந்தார்.

தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் சுமார் 20மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

இன்னும் சற்று நேரத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் , மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் ஆகியோரை ஆதரித்து வாக்குசேகரிக்க்கும் அவர், அதன் பின் கொளத்தூர், ஆர் கே நகர் , விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடம் வாக்குசேகரிக்கிறார்

வீட்ட்டை விட்டு வெளியேறிய விஜயகாந்தின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்