மரணம் இப்படியெல்லாமா வரும்? சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் திருப்போரூர் அருகே ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற இளைஞர் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முஹம்மது அப்ரிடி என்ற அந்த இளைஞர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார் .திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி வந்த நிலையில், இவரது குடியிருப்பின் சாவி தொலைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முடிவெடுத்து இடுப்பில் கயிறு கட்டி மாடியில் இருந்து இறங்கி உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து 14 ஆவது மடியில் இருந்து கீழ விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்