டிவியை உடைக்கும் வீடியோவுக்கு கட்டுப்பாடு விதித்த தேர்தல் ஆணையம்! கமல்ஹாசன் வெளியிட்ட புதிய வீடியோ

Report Print Kabilan in இந்தியா

தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, கமல்ஹாசன் புதிய வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஓ.பன்னீர் செல்வம், பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டி.வியில் பார்க்கிறார். பின்னர் கோபமடைந்து டார்ச் லைட்டால் டி.வியை உடைக்கிறார்.

இந்த வீடியோ விளம்பரம் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தேர்தல் விதிமுறைகளை மீறி விளம்பரத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையின்படி கமல்ஹாசனின் விளம்பரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்கு பதில் பீப் ஒலி ஒலிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம்.

நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும். நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே மாண்பு தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க விடுவோம். இன்று ஆள்வோருக்கு அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின் சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers