விமர்சனத்தின் உச்சத்திற்கு சென்ற கஸ்தூரி! புது ட்வீட்டால் பரபரப்பு

Report Print Kabilan in இந்தியா

விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று தான் போராடத் தூண்டியது காங்கிரஸ் மற்றும் தி.மு.க தான் என்று தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதை, நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு சேர்க்க, தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு டெல்லி வரை விவசாயிகளை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தினார்.

எலிக்கறி உண்பது, நிர்வாணமாய் நிற்பது என அவர்கள் மோடியை பார்க்க நடத்திய போராட்டங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதன் பின்னர், சமீபத்தில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து தானும் போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்தார் அய்யாக்கண்ணு. ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பிற்கு பிறகு, தேர்தலில் போட்டியிடும் தனது நிலைபாட்டை அவர் மாற்றிக்கொண்டார்.

அத்துடன், மோடிக்கு எதிராக தங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், தங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகள் தான் என எவரும் எதிர்பாராத ஒன்றை தெரிவித்தார்.

இதனை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் காரி துப்பும் வகையில் வார்த்தையை அந்த ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக அரசியல் விமர்சனங்களை செய்து வரும் கஸ்தூரியின் உச்சகட்ட விமர்சனமாக இது உள்ளது.

இந்த ட்வீட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் யாரை குறிப்பிட்டு இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers