வெளிநாட்டிலிருந்து நடிகர் கமல்ஹாசனுக்காக பறந்து வந்த தமிழர்! எதற்காக தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவதற்காக இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறார்.

இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடும் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் சாரவ் என்ற நபரின் பதிவு வைரலாகியுள்ளது.

அதில், கமல்ஹாசன் அவர்களே, நான் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறேன்.

எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம் என பதிவிட்டுள்ளார்.

இதோடு விமான நிலையத்தில் தான் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers