நல்லது நடக்கும் என்று காத்திருக்கிறேன்! வாக்களித்த பின் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு

Report Print Kabilan in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின், நல்லது நடக்கும் என காத்திருப்பதாக நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தகப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘முதன் முறையாக வாக்களித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஏனென்றால் அது பெருமைக்குரிய விடயம். 18 வயசுல நம் வீட்டில் முடிவெடுக்கவே, நம் வீட்டில் கேட்பார்களா என்று தெரியாது.

ஆனால், நாட்டை யார் ஆளணும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நானும் வாக்களித்துவிட்டேன். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்துட்டு இருக்கேன். நல்லது நடக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வரும் வாட்ஸ்-அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

அதற்கு என்ன வழி என்று சொல்லத் தெரியவில்லை. அது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி. இந்த வருடம் அதிகப்படியான வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். ஏனென்றால், மக்களிடையே அரசியல் பற்றி விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் பற்றிய அறிவை வளர்த்திருக்கிறார்கள். நான் அந்த விடயத்தை அதிகமாகப் பாராட்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers