நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை! வைரமுத்துவின் ட்வீட்

Report Print Kabilan in இந்தியா

ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றை விரல் அழுக்கானால் தவறில்லை என பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.

பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருவதுடன், சமூக வலைதளங்களில் வாக்களித்ததை தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் தான் வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers