கற்புக்கு அரசியே இப்பவே அதை சொல்லிரு..வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயியை மோசமாக பேசிய நபர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பாடகி சின்மயி வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அதைப் பற்றி இணையவாசி ஒருவர் கற்புகரசியே என்று கிண்டல் செய்யும் விதமாக பேசியதால், அந்தபருக்கு சின்மயி கொடுத்த பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. தற்போது வரை வாக்கு பதிவு ஒரு சில பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரையில் சித்திரை திருவிழா என்பதால், அங்கு இரவு 8 மணி வரைக்கும் மக்கள் வாக்கு பதிவு செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட பாடகியான சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தான் வாக்களித்த புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

அதைக் கண்ட இணையவாசி ஒருவர், சீதா தேவியே ... தயவு செய்து 10 வருடங்கள் கழித்து இந்த படத்தை போட்டு நான் வாக்கு செல்த்தும் போது அங்கே இருந்தவர் என் கையை தடவிய படியே மையை கீறினார் .. ஏதாவது நடந்தால் உடனேயே சொல் . கற்புக்கு அரசியே என்று கூறியிருந்தார்.

உடனே சின்மயி, அவரிடம் நான் கற்பு கரசியா இல்லையானு உன்கிட்ட கருத்து கேட்கலப்பா, உங்க தொகுதியில எவன் கற்பழிச்சானு பார்த்து தானே ஓட்டு போட்டீங்க, அந்தளவிற்கு இருக்கு உங்க லட்சணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், சின்மயி நீங்கள் கொடுத்த பதில் தான் சரியான பதில் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers