தாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான திருமணம் முடிந்த கையோடு புதுமண ஜோடிகள் வாக்களித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பெருங்குடி சீவரம் சரவணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர், மணிமாலா (22). இவருக்கும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவருக்கும் இன்று காலை அங்கிருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.

மணிகண்டன் தாலி கட்டியவுடன், மணிமாலா நான் ஓட்டு போட வேண்டும் என்று கணவரிடம் கூற, அவர் உடனடியாக சரி என்று கூறிவிட்டு, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு திருமணக் கோலத்திலேயே அழைத்துச் சென்றார்.. அப்போது, வாக்களிக்க வரிசையில் காத்திருந்தவர்கள், மணமக்களை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

மணமகள் மணிமாலா, தன்னுடைய வாக்கைப் பதிவு செய்யும் வரை மணமகன் அங்கு காத்திருந்தார். அதன் பின் சைதாப்பேட்டைக்கு மனைவியுடன் சென்ற மணிகண்டன், அங்கு தன்னுடைய வாக்கைப் பதிவுசெய்தார்.

இது குறித்து மணிமாலா கூறுகையில், ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை. எனக்குத் திருமணம் முடிந்த கையோடு இங்கு வந்தேன்.

திருமணம் முடிந்ததும் என் முதல் ஆசையை அவரிடம் சொன்னதும் அதை நிறைவேற்றிவிட்டார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மணிகண்டன் கூறுகையில், தேர்தலுக்கு முன் திருமணத் திகதியை முடிவுசெய்துவிட்டோம். திருமணம் முடிந்ததும் நாங்கள் இருவரும் வாக்களித்தது சந்தோஷமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers