நிச்சயம் நான் ஏமாற்ற மாட்டேன்... மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? ரஜினிகாந்த் அளித்த பதில்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்று ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் டிரென்ட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அவர்களின் ஆர்வம் எனக்கு புரிகிறது, நிச்சயம் அவர்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.

இதே போல் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் எதிர்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று ரஜினி பதில் அளித்தார்.

அடுத்து மீண்டும் மோடி ஆட்சி அமைப்பாரா என்கிற கேள்விக்கு மே 23ஆம் திகதி அது தெரிந்துவிடும் என்று கூறிய ரஜினி, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers