வெளிநாட்டில் இருந்து கொண்டு வாக்களிக்காமல் இருந்த பிரபல தமிழ் நடிகர்கள்..வெளியான முழுத் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் நேற்று நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த நிலையில், சில திரைப்பிரலங்கள் ஓட்டு போட வராமல் இருந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்தனர்

இதில், சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்குச் சாவடிக்கு வந்தும் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் திரும்பிச் சென்றனர். அதன் பின் சிவகார்த்திகேயன் தான் வாக்களித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார், அதன் பின் ரமேஷ் கண்ணா வாக்களித்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில் சில நடிகர்கள் வெளிநாட்டில் இருந்துக் கொண்டு வாக்களிக்க வராமல் இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ளார். இயக்குநர் சுந்தர் சி-யும் விஷாலும் புதிய பட ஷூட்டிங்கில் துருக்கியில் உள்ளார்கள். நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா படப்பிடிப்பில் போர்ச்சுக்கல்லில் இருக்கிறார்.

ஆகையால் இவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது. தவிர, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வாக்களித்தார்களா என்ற ஆராய்ச்சியிலும் ரசிகர்கள் இறங்கி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers