ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது நடந்த பெரும் தவறு!

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த பெரும் தவறு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவரது கை விரலில் மை மாற்றி வைக்கப்பட்டுள்ளது

அப்போது அவருக்கு இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக, வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம் என்றும், ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers