6 மாதங்கள் பின்தொடர்ந்தான்.....காட்டுக்குள் பாதி உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவி: பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் மது என்ற கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு பாதி உடல் கருகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவியின் கொலை சம்பவம் தொடர்பாக சுதர்ஷன யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது காதல் விவகாரம் என்றும் அந்த மாணவி தனது பாடத்தில் தோல்வியை சந்தித்தால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மதுவின் பெற்றோர் கூறியதாவது, எனது மகள் சுதர்ஷன யாதவை காதலித்ததாக கூறுவது பொய். அவன் 6 மாதங்கள் எனது மகனை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தான்.

ஒரு முறை எனது மகளை தடுத்து நிறுத்தி பேசுவதற்கு முயன்றான். எனது மகள் எங்கு சென்றாலும் அவளை பின்தொடர்ந்து கொண்டே இருந்தான். இதனால் அவளது தந்தை தான் கல்லூரிக்கு அழைத்து சென்றார்.

ஏப்ரல் 13 ஆம் திகதி எனது மகள் கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை. இரவு 7 மணி கடந்த பின்னர் அவள் வராத காரணத்தால் காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் புகாரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து அவள் இறந்துவிட்டதாக பொலிசார் எங்களிடம் தெரிவித்தபோது அதனை நாங்கள் நம்ப மறுத்துவிட்டோம். அவளுக்கு 16 ஆம் திகதி பிறந்தநாள் , அதனால் கேக் வாங்கி வைத்திருந்தோம், அவள் நிச்சயம் தனது பிறந்தநாளுக்கு வந்துவிடுவாள் என்று எதிர்பார்த்திருந்தோம், ஆனால் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திதான் எங்கள் காதுகளுக்கு வந்தது.

மேலும், எனது மகளுக்கு தொல்லை கொடுத்த சுதர்ஷன யாதவின் மாமா பொலிசாக பணியாற்றுகிறார். அவர் மூலம் இந்த கொலையை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்