மாமியார், மனைவியை கொடூரமாக வெட்டி கொன்றது ஏன்? கணவரின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவி மற்றும் மாமியாரை வெட்டி கொன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தின் அமுல்நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (40).

பழனியம்மாளும், அவரது தாய் முத்தம்மாள் (60) என்பவரும் தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று இரவு பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளை மணிகண்டன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் மணிகண்டனை கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் எனது மனைவியை உறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மறுத்து வந்தார். இதனால் அவருடன் நான் அடிக்கடி தகராறு செய்தேன்.

அப்போது என் மனைவியும், மாமியாரும் சேர்ந்து என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்கள்.

என் மனைவி வேலை செய்யும் தோட்டத்தில் அவரை பார்க்க சென்ற போது அவர் அங்குள்ள வேறு ஒருவரிடம் சிரித்து பேசி பழகிக் கொண்டு இருந்தார். இது தொடர்பாக எங்களுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில் நேற்று இரவும் இது தொடர்பாக தகராறு வந்தது.

பின்னர் என் மனைவி தூங்கச் சென்று விட்டார். ஆனால் ஆத்திரம் அடங்காமல் இருந்த நான் என் மனைவியை வெட்டிக் கொன்றேன். சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டு இருந்த என் மாமியார் எழுந்து அதை தடுத்தார். அவரையும் வெட்டி கொன்றேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்