இலங்கை குண்டு வெடிப்பு குறித்து 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்த இந்தியா: அலட்சியம் என புகார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு குறித்து நான்கு நாட்களுக்கு முன்னரே இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் ஆகிய 6 இடங்களில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியா எச்சரித்தும் அதிகாரிகள் போதிய கவனம் தராததல் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு நாட்களுக்கு முன் இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்துள்ளது என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்