ஜீவ சமாதி அடைந்தாரா சிறுவன்? பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா

திருவண்ணாமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக கூறி சித்தர்களை அடக்கம் செய்வது போல் சிறுவனையும் அடக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், ஆசிரியரான இவரது மகன் தனநாராயணன், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு வலிப்பு நோய் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார், இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலிப்பு ஏற்படவே, அருகிலிருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதை பார்த்த பெற்றோர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின் தனநாராயணனை மீட்டனர்.

இதன்பின்னர் அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது, இந்நிலையில் அங்கு வந்த சாமியார் ஒருவர் தனநாராயணனை பரிசோதித்து விட்டு ஜலசமாதி அடைந்து விட்டதாக கூறினார்.

இதனையடுத்து தனநாராயணனை ஜீவ சமாதி செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர், இதன்படி சித்தர்களை அடக்கம் செய்வது போன்று கை, கால்களை கட்டி தியான நிலையில் அமரவைத்து பூஜை செய்தது அடக்கம் செய்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்