அதே ஹொட்டலில் இன்று இருந்திருந்தால்..! இலங்கை குண்டுவெடிப்பு குறித்து வேதனையுடன் பேட்டியளித்த நடிகை ராதிகா

Report Print Kabilan in இந்தியா

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஹொட்டலில் இருந்து தான் வெளியேறியது குறித்து நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொழும்பில் உள்ள தேவாலயம், நட்சத்திர ஹொட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 150க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த Cinnamongrand ஹொட்டலில் தங்கியிருந்த நடிகை ராதிகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘இரண்டு நாளுக்கு முன்னாடி இலங்கை சென்றிருந்தேன், அதுவும் குடும்பத்துடன். என்னோட அண்ணன் அங்கேதான் இருகிறார்.

நாங்கள் சின்னமன் கிராண்ட் ஹொட்டலில் தங்கியிருந்தோம். எப்போதும் இலங்கை போனாலும் பிரசித்திபெற்ற கொச்சிக்கடை தேவாலயத்திற்கு போவோம். சக்தி வாய்ந்த தேவாலயம். ஆனால், இன்றைக்கு காலையில் இந்த தேவாலயத்திலும், நாங்கள் தங்கியிருந்த ஹொட்டலிலும் குண்டு வெடிச்சிருக்குற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

என்னோட Brother தான் எனக்குப் போன் பண்ணி இந்த செய்தியை சொன்னார். எங்களை இன்னும் இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கிவிட்டு போகச் சொல்லி என்னுடைய Brother கட்டாயப்படுத்தினார். ஷூட்டிங் வேலைகள் இருந்ததால் சென்னைக்கு வரவேண்டிய சூழல் அதனால் கிளம்பிவிட்டோம்.

ஒருவேளை அங்கே அதே ஹொட்டலில் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்னு தெரியல. கடவுள் கூடவே இருக்கார்னு நம்புறேன். முக்கியமா, இலங்கையில் இருக்கக்கூடிய தேவாலயங்களில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பண்டிகையை ரொம்ப கிராண்டா கொண்டாடுவாங்க. என்னால் இந்த சம்பவத்தை ஏத்துக்கவே முடியல.

இலங்கையில் இப்போதுதான் அமைதி திரும்பி இருக்கு. இதெல்லாம் இலங்கை மக்கள் கடந்து வந்துட்டாங்க. இப்போது தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இப்போது இந்த சம்பவம் நடந்திருப்பது மனசுக்கு வருத்தமா, கனமா இருக்கு. அதுவும் ஈஸ்டர் அன்னைக்கு தேவாலயத்தில் குண்டு வெடிக்கிறதுலாம் டூ மச். இந்த சம்பவத்தை பண்ணவங்களை மன்னிக்கவே முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்