இலங்கை குண்டு வெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 7 இந்தியர்கள் மாயம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இதுவரை 5 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், மேலும் 2 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

லஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ரஜினா, ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரகம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

7 இந்தியர்கள் மாயம்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு கடந்த 20-ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் 7 பேரும் சாங்கிரி லா ஹொட்டலில் தங்கியிருந்தனர். அங்கு குண்டுவெடிப்பு நடந்ததில்,

7 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது. மீதமுள்ள 5 பேரின் நிலை என்னவென தெரியவில்லை.

தேர்தல் பணிகளை ஆற்றிவிட்டு இலங்கை சென்ற 7 பேரில் இருவர் உயிரிழந்தது குறித்தும் 5 பேரின் நிலை என்னவென தெரியாதது குறித்தும் தகவலறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்