இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி.... ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு மிக அதிக அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடல்வழியாக யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக நேற்று மாலை முதல் கடலோர காவல் குழும பொலிசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடலோர காவல் குழும கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, வடகாடு உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்