வெளியூரில் இருந்த கணவன்... திருமணமான 3 மாதத்தில் உள்ளூரில் சடலமாக கிடந்த புதுப்பெண்... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயசூர்யா (23). இளம்பெண்ணான இவருக்கும் காவலராக பணிபுரியும் முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் முத்துக்குமார் தேர்தல் பணிக்காக கேரளா சென்றிருந்தார்.

நேற்று இரவு ஜெயசூர்யா வழக்கம் போல் அறைக்கு படுக்க சென்றார். இன்று காலை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் அறையின் உள்ளே பார்த்த போது ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் ஜெயசூர்யாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அங்கு வந்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினர்.

மேலும் முத்துக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஜெயசூர்யாவின் கணவர் முத்துக்குமாருக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர் ஊருக்கு வந்தார்.

இதையடுத்து ஜெயசூர்யா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்