மோடியை திருடன் என்று கூறியது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டது என்று விமர்சித்ததற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் மே 19ஆம் திகதி நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, 23ஆம் திகதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் சௌக்கிதார் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என அறிவித்துவிட்டது’ என தெரிவித்தார்.

ராகுலின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.கவினர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாகப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன். இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்