இலங்கை குண்டுவெடிப்பு இந்தியாவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தலை கோடிட்டு காட்டுகிறது என இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் கூறியதாவது,

2009 க்கு பின்னர் இலங்கை ஊடாக அந்நிய சக்திகளின் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் இந்தத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டுகின்றன

இந்தியா தனது நலனை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தனது பாதுகாப்பானது இலங்கைத் தீவின் உண்மையான அமைதியிலேயே தங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து மதச் சார்பற்ற, வடக்கு கிழக்கு இணைந்த, உச்ச அதிகாரம் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்தி தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கு முன்னின்று பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவுக்கு உணர்த்துகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்