மக்களே இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவில் வைத்து எனக்கு வாக்களியுங்கள்: மோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் வாக்களிக்கும்போது இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், புனிதமான பண்டிகை நாள் ஒன்றில் இப்படி கொடூரமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் மிக கொடுமையான ஒன்று.

இலங்கையில் நடந்தது போன்று இந்தியாவில் நடக்காமல் இருக்க நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் வாக்குக்கு சக்தி இருக்கிறது.

நீங்கள் தாமரைக்கு வாக்களித்தால் பயங்ரவாதத்திற்கு எதிராக நான் போராட முடியும். நாடு பாதுகாப்பாக இருக்கும். எனவே வாக்களிக்க போகும்போது இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறக்காதீர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்