பணி முடிந்து திரும்பியதும் தூக்கில் தொங்கிய பெண் பொலிஸ்: விசாரணையில் அம்பலமான தகவல்!

Report Print Vijay Amburore in இந்தியா

தேர்தல் பணி முடிந்ததும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் பொலிஸார் வழக்கில் முக்கிய திருப்பமாக கணவர் தொல்லை கொடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

நெய்வேலி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்கிந்த் தேவி என்பவர் மக்களவை தேர்தல் பணிக்காக திருச்சி சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து பணி முடிந்து திரும்பிய அவர், திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையாக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதில், ஜெய்கிந்த் தேவி திருமணத்திற்கு முன்பாக தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பணிபுரிந்த மாணிக்கவேலு என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, அபிதா, அட்சயா என 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

மனைவி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றதிலிருந்தே அவருடைய கணவருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. எங்கே அவர் விட்டு சென்றுவிடுவாரோ என்கிற தாழ்வுமனப்பான்மையில், அடிக்கடி மது அருந்திவிட்டு தேவியை கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்றும் கூட மனைவியுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளார் என அவருடைய அக்கா ரேணுகாதேவி பொலிஸ் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers