ஆசிய தடகள போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை சாதனை!

Report Print Vijay Amburore in இந்தியா

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது நாள் போட்டியில் இந்தியா சார்பில் பெண்களுக்கான 800மீ தடகள போட்டியில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து பந்தய தூரத்தை 2 நிமிடம் 4.96 வினாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2 நிமிடம், 02:70 வினாடி நேரத்தில் பந்தய தூரத்தை கடந்த கோமதி இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்தார்.

நாட்டிற்கே பெருமை தேடித்தந்துள்ள கோமதிக்கு தற்போது பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்