இளம்கோடீஸ்வரர் மர்மமாக இறந்து கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவி கைது!

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் மகன் மர்மமாக இறந்து கிடந்த வழங்கில் அதிரடி திருப்பமாக அவருடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் ரோஹித் சேகர், கடந்த 16ம் திகதியன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

ஆனால் அவருடைய தாய் உஜ்ஜவாலா சர்மா, தன்னுடைய மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காக அவருடைய மனைவி கொலை செய்திருக்கலாம் என புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியதோடு, அவருடைய மனைவி அபூர்வா சுக்லாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு அவர் கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், தங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானாதாக இல்லை என்றும், திருமணத்துக்குப் பிறகு தனது நம்பிக்கை, கனவு எல்லாம் சிதைந்துவிட்டதாகவும் அபூர்வா தெரிவித்தார்.

கொலை நடந்த அன்றும் கணவன்- மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த ரோஹித்தின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி அபூர்வா கொலை செய்துள்ளார்.

அடுத்த ஒரு மணி நேரத்திலே அனைத்து ஆதாரங்களையும் அவர் அழித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்