உங்கள் கணவருக்கு உணவளிக்காதீர்: முதலமைச்சரின் அட்வைஷ்

Report Print Abisha in இந்தியா

தங்கள் விருப்பப்படி வாக்களிக்காத கணவருக்கு பெண்கள் உணவளிக்க கூடாது என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பீகாரின் மாநிலம், மதுபானி மக்களவை தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் அசோக் யாதவுக்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பேசிய அவர், தங்கள் விருப்பப்படி கணவன்மார்கள் வாக்களித்தால் மட்டுமே அவருக்கு மனைவிமார்கள் உணவளிக்க வேண்டும் என்று பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களை நோக்கி கூறினார்.

மேலும், அப்படி ஒருவேளை வாக்களிக்காத கணவரை மனைவிகள் நாள் முழுக்க பட்டினி போட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்