தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: பொலிஸாருக்கு வந்த முக்கிய கடிதம்!

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக பொலிஸாருக்கு போன் செய்த ஒருவர், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுளளதாகவும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தமிழக பொலிஸாருக்கு கடிதம் எழுதியிருக்கும் கர்நாடக பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்துமாறு எச்சரித்துள்ளனர்.

மேலும் பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால் எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்