கண்முன்னே பரிதாபமாக போன யானையின் உயிர்... நடந்தது என்ன? பலரையும் கண்கலங்க வைத்த வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் செயினில் கட்டப்பட்ட யானை ஒன்று அதிலிருந்து தப்புவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென்று கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

கர்நாடகா மாநிலத்தின் Nagarahole National Park-ல் உள்ள 37 வயது மதிக்கத்தக்க Drona என்ற யானை உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், கடந்த 26-ஆம் திகதி திடீரென்று செயினில் கட்டப்பட்டிருந்த போது, அதிலிருந்து மீளவதற்காக போராடிய நிலையில் உயிரிழந்த்து.

இந்நிலையில் உயிரிழந்த யானையின் கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் செயின் ஒன்று Drona-வின் காலில் கட்டப்பட்டுள்ளது.

அப்போது தீடீரென்று கட்டப்பட்டிருந்த செயினை கழற்றுவதற்கு யானை போராடுகிறது. இதை அறிந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அருகிலிருக்கும் தண்ணீரை எடுத்து அதன் மீது தொடர்ந்து ஊற்றுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து முடியாமல் செயினை பிடித்து இழுக்கும் Drona திடீரென்று கீழே விழுந்து உயிரிழுந்துவிடுகிறது.

அங்கிருக்கும் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், டேங்க் ஒன்றில் இருந்த தண்ணீர் குடித்த பின்னரே அது நிலை தடுமாறத் துவங்கியது என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே Drona-வுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மராடைப்பு காரணமாக கூட உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே இதற்கான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்