இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in இந்தியா

இமயமலைப் பகுதியில் பனி மனிதனின் காலடித் தடத்தைக் கண்டதாக இந்திய ராணுவம் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மனிதனைப் போல் உருவம் கொண்ட பனி மனிதன் பனிப்பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ‘எட்டி’ என்று அழைக்கப்படும் பனி மனிதர்கள், இமயமலைக் காடுகளில் வாழ்ந்து வருவதாகவும் பலரும் நம்பி வருகின்றனர்.

ஆனால், இதுதொடர்பான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் இல்லாத நிலையில், நேபாள மக்கள் அவர்களை கண்டுள்ளதாக கூறி வருகின்றனர். சாதாரண மனிதனைக் காட்டிலும் பெரிய உருவம் கொண்டவனாக பனி மனிதன் இருப்பான் என்றும் கூறிகின்றனர்.

எனினும் பனி மனிதன் தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பனி மனிதனின் காலடித் தடம் என்று கூறி புகைப்படங்களை இந்திய ராணுவம் பகிர்ந்தது. அத்துடன், ‘மாகலு-பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கடந்த 9ஆம் திகதி மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்தபோது, பனிமனிதன் எட்டியின் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலும் கொண்ட கால் தடம் கிடைத்துள்ளது’ என குறிப்பிட்டது.

இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனினும், ஒரு சிலர் இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டனர் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்