கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட இரட்டை சிறுமிகளின் உடல்கள்: ஏமாற்றிய கொடூரன்.....வெளியான பின்னணி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய நபரின் கிணற்றில் இருந்து தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமான நிலையில், அவரது சடலம் பாழடைந்த கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது,

கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த மாணவி மட்டுமல்லாமல் கடந்த 1 மாத‌த்திற்கு முன் மோனிஷா என்ற சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து உடலை கிணற்றினுள் வீசியதாக விசாரணையில் சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவார்.

இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 பெண்களையும் சீனிவாசன் இதே முறையில் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இதுவரை 5 பெண்கள் இதுபோன்று கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றினுள் வீசியுள்ளார்.

இந்நிலையில் சீனிவாசன் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த அப்பகுதி மக்கள் அவரது வீட்டை அறுத்தி நொறுக்கி தீவைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்