காபி எஸ்டேட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் இளம் மகள்: தீவிர விசாரணை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடகாவில் Kodagu மாவட்டம் Doddamalte கிராமத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கவிதா மற்றும் அவரது 17 வயது மகள் ஜெகஸ்ரீ ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான காபி எஸ்டேட்டில் இறந்துகிடந்துள்ளனர்.

கவிதாவின் மகன் தனது தாய்க்கும், சகோதரிக்கும் போன் செய்து பார்த்து அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில், அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்து காபி எஸ்டேட்டுக்கு சென்று பார்த்து வருமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளான்.

இதனை தொடர்ந்து காபி எஸ்டேட்டுக்கு சென்ற பார்த்தவர்கள், அங்கு கவிதா தனது மகளுடன் இறந்துகிடந்ததை பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில், இருவரையும் மர்ம நபர்கள் யாரோ கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ரத்தம் அதிகம் வெளியேறி இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கவிதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் எஸ்டேட்டை தனது பிள்ளைகளோடு சேர்ந்து கவனித்து வருகிறார். மகள் ஜெகஸ்ரீ இந்த ஆண்டுதான் பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக காபி எஸ்டேட்டில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக இந்தகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காபி எஸ்டேட்டுடன் சில தனிநபர்களுக்கு பிரச்சனை இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்