சகோதரிகளை மோசமாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவருக்கு நேர்ந்த கதி: பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சகோதரிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை தட்டி கேட்ட மாணவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து 45 லட்ச ரூபாய் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடன் அளித்தவரின் ஆட்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால்‌ சிவசுப்ரமணியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று‌ வீடு திரும்பினார்.

இதனையடுத்து மீண்டும் கடன் அளித்தவர்களின் ஆட்கள் சிவசுப்ரமணியனின் வீட்டிற்கு வந்து அவரது மகள்கள் குறித்து தரகுறைவாக பேசியதாகவும் அதனை அவரது மகனான, கல்லூரி மாணவர் அருண் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மளிகைக் கடையில் இருந்த அருணை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்