காரில் ஒசாமா பின்லேடன் புகைப்படம்.... எழுதியிருந்த தீவிரவாத வாசகம்.... இலங்கை தாக்குதலை அடுத்து தீவிர விசாரணை

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை தாக்குதலை தொடர்ந்து கேரளாவில் ஊடுருவியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் தீவிரவாத வாசகங்கள் எழுதியிருந்த காரை பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

இதை தொடர்ந்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஊடுருவியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் குறித்து தேசியப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொல்லம் பகுதியில் வாகன சோதனையின் போது ஒரு காரில் ஒசாமா பின்லேடன் புகைப்பட ஸ்டிக்கர்களும், தீவிரவாத வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கார் ஓட்டுனரை கைது செய்துள்ள பொலிசார் அது யாருக்கு சொந்தமானது என்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்