உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்த முடியாது! தமிழக அரசு தகவல்

Report Print Kabilan in இந்தியா

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியிருப்பதால், தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு புதிய பிரமாண பத்திரம் ஒன்றை இன்று தாக்கல் செய்தது.

அதில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்க, மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆட்களும், நேரமும் இல்லை.

இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.

இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சி அமைப்புகள் சரியாக செயல்படாமல் இருப்பதாகக் கூறப்படுவதை தமிழக அரசு மறுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்