தேர்தல் பிரசாரத்தின் போது டெல்லி முதல்வர் மீது மர்ம நபர் தாக்குதல்!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் திடீரென தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மோத்தி நகர் பகுதியில் இன்று மாலை திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கெட்ட வார்த்தையில் திட்டியவாறே, கெஜ்ரிவாலின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதனை பார்த்து அதிர்ந்து போன தொண்டர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...