வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்... வீடியோ அழைப்பில் அவரை பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண் அங்கு சித்ரவதைகளை அனுபவிப்பதாகவும், அவரை உடனே மீட்க வேண்டும் எனவும் கணவர் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்தவர் நவாஸ்கான். டீக்கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி யாஸ்மீன் (45).

இவர்கள் வீட்டில் வறுமை வாட்டிய நிலையில் நவாஸ்கானின் அக்கா மகன், குவைத்தில் வயதான தம்பதிகளுக்கு சமைத்து கொடுக்கும் வேலை இருப்பதாகவும், மாதம் ரூ 25000 சம்பளம் கொடுப்பார்கள் எனவும் கூறினார்.

இதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி நவாஸ்கானின் மனைவி யாஸ்மீன் ஏஜண்ட்கள் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் நவாஸ்கானின் அக்கா மகன் மாலத்தீவுக்கு வேலைக்காக சென்று விட்டார்.

இந்நிலையில் தனது மனைவி யாஸ்மீன் குவைத்தில் பெரும் கொடுமைகளை அனுபவிப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் ஈரோடு எஸ்.பிடம் நவாஸ்கான் புகார் அளித்துள்ளார்.

நவாஸ்கான் கூறுகையில், குவைத்துக்கு சென்றபிறகு எனது மனைவியிடம் பேசவே முடியவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எனது மனைவியிடம் இருந்து எனது செல்போனுக்கு வீடியோ அழைப்பு வந்தது.

அவரின் முகத்தில் காயம் இருந்த நிலையில் அழுது கொண்டே பேசினார், இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

சம்பளம் கேட்டால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள். என்னை உடனே அழைத்து செல்லுங்கள், இல்லையெனில் செத்து விடுவேன் என கூறினார்.

வீடியோ காலில் யாஸ்மீன் கதறுவதை தாங்க முடியவில்லை.

அவரின் இரு கைகளையும் கொதிக்கும் தண்ணியில் முக்கி கொடுமைப்படுத்தியுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers