மீண்டும் பணிக்கு திரும்பினார் விங் கமாண்டர் அபிநந்தன்: செல்பி எடுக்க குவிந்த வீரர்கள்!

Report Print Vijay Amburore in இந்தியா

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய விமான படையின் விங் கமாண்டர் அபிநந்தன் சனிக்கிழமையன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய ராணுவ பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களுடைய எல்லையில் புகுந்த இந்திய ராணுவம் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து வான்வழி தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது மிக் ரக விமானத்தில் அவர்களை விரட்டி சென்ற அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் இருந்து தப்ப பாராசூட் மூலம் தரையில் குதித்தார்.

பிப்ரவரி 27ம் திகதி அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்தினர், சில நாட்களுக்கு பின்னர் விடுவித்தனர். அவருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து சில நாட்கள் விடுப்பு கொடுக்கப்பட்டது. மேலும் அபிநந்தனுக்கு ஸ்ரீநகரில் அமைதியான ஒரு இடத்தில் பணிமாறுதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று பணிக்கு திரும்பிய அபிநந்தனுடன் சக வீரர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தனக்கு பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அபிநந்தன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers