டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிப்பது உண்மைதான்: நடிகர் பிரகாஷ்ராஜ்

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லி மாணவர்களுக்கு தமிழக மாணவர்களால் பாதிப்பு ஏற்படுவது உண்மை தான் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் கர்நாடக மக்களவை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கு நன்றி கடனாக நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டெல்லியில் தமிழக மாணவர்கள் அதிகமாக படிப்பதால் அவர்களுக்கு தான் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது என டெல்லி முதல்வர் பேசியிருந்தது குறித்து பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், அது நியாயமான கருத்து தான். தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் இது போன்ற பிரச்னைகள் தீரும் என கூறினார்.

அப்போது பத்திரிகையாளர்கள் நீங்கள் தமிழ் படங்களில் நடித்து தானே பிரபலமடைந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நான் தமிழன் அல்ல கன்னடத்துக்காரன்'' என ஆவேசமாக பதிலளித்தார்.

பிரகாஷ்ராஜின் இந்த கருத்திற்கு டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers