திருமணம் செய்து கொண்ட பள்ளி மாணவன் மற்றும் மாணவி... ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பள்ளியில் படிக்கும் மாணவரும், மாணவியும் ஒரு வாரத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சோம்நாத். இவர் ஸ்ரீநந்தா உயர்நிலை பள்ளியில் படித்து வந்தார்.

இதே பள்ளியில் படித்து வந்த அபந்திகாவுடன் சோம்நாத்துக்கு காதல் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த வாரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சோம்நாத்தும், அபந்திகாவும் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இருவர் சடலமும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது குறித்து சரியாக தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...