நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிவிட்டு சொந்த ஊருக்கு பேருந்தில் சென்ற மாற்றுத்திறனாளி மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்வில் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் 81 ஆயிரத்து 241 மாணவிகள் உட்பட, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 711 பேர் பங்கேற்றனர்.

மதுரையில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், ராமநாதபுரம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா என்ற மாணவி நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடித்த சந்தியா, ராமநாதபுரத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மாணவி சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers