இரண்டு குழந்தைகளின் தாயை தன்னுடன் அனுப்புமாறு இளைஞர் கண்ணீருடன் கோரிக்கை!

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வேறு நபருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள தனது காதலியை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது./p>

திருவேற்காட்டை சேர்ந்த 28 வயதான இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த பெண் காணாமல் போன நிலையில் அவரின் கணவர் பொலிஸ் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்த இளம்பெண் தனது திருமணத்துக்கு முன்பு காதலித்த முரளி என்பவரை சந்திக்க சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து இளம் பெண்ணை வரவழைத்து பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும் காதலனுடன் வாழ விரும்புவதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் இளம் பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காவல் நிலையம் வந்த முரளி தனது காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார்.

தன்னுடன் தான் காதலியை அனுப்ப வேண்டும் என்று கூறி அங்குள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

பின்னர் அங்கு முரளியின் காதலி வந்த நிலையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து முரளி கீழே இறங்கினார். பின்னர் முரளி கதறி அழுதபடி இருந்தார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்